Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 25 AUG 1935
இறப்பு 12 JUN 2026
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி
வயது 90
திருமதி மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி 1935 - 2026 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிப்பிள்ளை முத்துத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஒரு மாதம் ஆகிவிட்டதே அம்மா,
ஆனால் உங்கள் பாசம் மட்டும் இன்னும்
எங்களை விட்டு செல்லவில்லை…
 நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கை
 கடினமாக இருந்தாலும், நீங்கள்
கற்றுக் கொடுத்த தைரியம்
எங்களை முன்னே நடத்துகிறது…

ஒவ்வொரு நாளும்
 உங்களை நினைத்து வாழ்கிறோம்,
ஒவ்வொரு தருணமும்
 உங்கள் அன்பை உணர்கிறோம்…

கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருந்தாலும்,
எங்கள் உள்ளத்தில்
நீங்கள் எப்போதும் அருகில்தான்…

என்றும் உங்கள் நினைவில்…
என்றும் உங்கள் பிள்ளைகள்… 🤍

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்