Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 OCT 1934
இறப்பு 19 JUN 2013
அமரர் மயில்வாகனம் பரமசாமி
வயது 78
அமரர் மயில்வாகனம் பரமசாமி 1934 - 2013 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பரமசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!

வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!

அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.!!

உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி- பேபி சரோஜா(சுவிஸ்),
மகன்- ராஜ்குமார்(சுவிஸ்),
மருமகள்- தமிழ்செல்வி(சுவிஸ்),
பேரப்பிள்ளைகள்- ரிதன்(சுவிஸ்), யுவேன்(சுவிஸ்).

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices