2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மயில்வாகனம் பத்மநாதன்
ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை,பலாலி ஆசிரியர் கலாசாலைஉடற்கல்வி விரிவுரையாளர்
வயது 83
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இராண்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த அப்பா!
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப் பொறுத்திட
முடியுமோ தான்? அப்பா,
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்