யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 18-11-2021
நீங்காத நினைவுக்கும் ஓராண்டு வந்திருச்சே...
அப்பா
மூச்சுவிட மறந்தாயென்ற தொலைபேசிச் செய்தியது
காதோரம் தானே இன்னும் நிக்கிறது....
உன் கரம்பிடித்த கைகளும் தடம் தொடர்ந்த கால்களும்
முகம்பார்த்த விழிகளும் ஓராண்டு காலமதாய்த்
தடம் தேடி அலைகிறதே ஓய்வின்றி நினைக்கிறதே
உன் நிழல் தொடர்ந்த உயிரோடு கால்பட்ட மைதானம்
கரம் தொட்ட பந்தெனக் கண்ணீர் வெள்ளத்தில்க் கரைசேர
முடியாமல் நித்தமும் தவிக்கிறதே...
உன் குரல்கேட்ட நட்புகளும் உறவாடித் திரிந்தவரும்
வழிதொடரும் மாணவரும் நினைவோடு ஒன்றாகி
நின்நிழலைத் தேடியே நித்தமும் காத்திருக்க...
ஓராண்டு கடந்ததென எவரப்பா நினைத்திருப்பார்
நினைவுச் சுவருரசி நித்தமும் நீயிருக்க நினைக்காத
நிமிடங்களைக் கடக்காத நெஞ்சங்களின் தீராத
ஆசைகளைச் சொல்லியழப் போதாதே
உன்வாழ்க்கைச் சுருக்கத்தை
மனதோடு சேர்த்து மண்ணையும் பார்த்தாய்
நினைவோடு சேர்ந்தே நித்தமும் வாறாய்
எம்மோடு சேர்ந்தே எப்போதும்
இருக்கக் காலங்கள் கடந்தாலும்
நினைவோடு வாழ்வாய் நீ
மண்ணோடும் மக்கள் மனதோடும் நீங்காத நினைவாக
நீழும் காலமது ஓராண்டைக் கடந்தாலும்
எம்மோடு எப்போதும் நிழலாக நீயிருக்க
உன்தடம் தேடியே எம்பாதம் நடக்கிறது....
நீங்காத நினைவாக எம்மோடு தொடருங்கள் ....
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details