Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 09 JAN 1954
இறப்பு 25 MAR 2026
திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ்
வயது 72
திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ் 1954 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா 31 நாட்கள் கரைந்ததம்மா
உன் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!

நீங்கள் எங்களை விட்டு அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!

அன்று எங்கள் அழுகையின் அர்த்தம்
புரிந்த அகராதி புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா!

ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உன்னை போன்று அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்