"அன்பு பாசம் நேசங்களின் உறவுப் பாலமாய் இருந்த ஒரு மலர் உதிர்ந்தது" எங்கள் உடன் பிறவாத சகோதாரியாய் மைத்துனியாய் பல்லாண்டுகள் எம்முடன் உறவாடிய நீங்கள் எங்களை விட்டு பிரிந்தது எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளதது. காலனின் கோலம் இறைவனின் சித்தம் அதுவோ? எங்கள் சகோதரனின் (பிரேமன் குணா - குனேந்திரன் - ஏப்ரல் 2022 ) கடும் நோயின் பொழுதும் பின்பு அவரின் இறுதி நேரங்களிலும் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லியும் இறுதியில் தினம் தினம் வந்தும் பின்பு உயிர் நீத்த வேளைகளிலும் மற்றும் அவரின் இறுதியாத்திரையிலும் பலவாறு கலந்து கொண்டு பங்களித்ததை நாங்கள் யாரும் மறக்க முடியுமா என்ன? சிறு வயது முதல் உங்களை தெரிந்த உங்கள் "அம்மாச்சி" அக்காவை உங்களின் இன்னொரு தாய் என்று நீங்கள் உங்கள் மனதில் நிறுத்தி இருந்ததை நாம் பலரும் அறிவோம். எல்லா பந்தங்களும் இந்த மாய உலகில் மறைந்து விடுமா என்ன? நினைவுகள் என்றும் பசுமையேதான் எங்கள் நெஞ்சங்களிலே சகோதரியே மைத்துனியே. உங்கள் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! இலங்கை - ஜெர்மனி - கனடா வாழ் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி - யோகேஸ்வரி பிள்ளைகள் குடும்பத்தினர் விஷேசமாக "அம்மாச்சி" அக்கா யோகேஸ்வரி இரவீந்தரமூர்த்தி, கோணேஸ்வரி விஜேந்திரன் டொரோண்டோ கனடா.