Clicky

31ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1931
இறப்பு 22 MAR 2021
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை (மலர்)
வயது 89
அமரர் மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை 1931 - 2021 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, பிரான்ஸ் Saint-Ouen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா சூசைப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

O God, the creator and redeemer
of all the faithful,
in the loving kindness,
have mercy on the soul of Metilda,
Grant her the remission of
all her sins and give her the joy of
eternal bless, through
our LORD
JESUS CHRIST,
AMEN....

எங்கள் அம்மாவுக்கு பிள்ளைகளின் இரங்கல்

அம்மா எங்களை பத்து மாதம் சுமந்தவளே
எம் மாத்திரம் எங்களை விட்டுப் பிரிந்து செல்ல
மனம் வந்தது அம்மா
கரம் பொன் மண்ணில் பிறந்து சில்லாலையில் வாழ்க்கை
ஆரம்பித்து - பின்பு
நாடு விட்டு பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் சென்று - அங்கு
உங்கள் கடைசி கால வாழ்க்கையை மலர்கள் மணம்
வீசுவது போல்; சந்தோஷமாய் வாழ்ந்து வந்தீர்கள்
உங்கள் கடைசி மகனுடன் ; கடைசியில்
இறுதி மூச்சு இறைவனிடம் அர்ப்பணம் செய்து
விட்டீர்கள் அம்மா;
பெற்ற பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
என்று நீண்ட உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
இறைவனின் அழைப்பை வெல்ல முடியாது அம்மா;
உங்களின் நல்ல மனதிற்கு நீங்கள் செய்த
உதவிகள் பற் பல அம்மா
இறைவனும் உங்களை கஷ்டப்படாமல்
தன் வசம் கூட்டி சேர்த்திட்டார் அம்மா
மரண செய்தி எங்களுக்கு எல்லாம் தாங்க முடியாத வேதனை தான் அம்மா;
இனி உங்களை எங்கு காண்போம் அம்மா உங்களுக்காக நாங்கள் தினமும் வேண்டுகின்றோம் அம்மா;நீங்களும் எங்களுக்காக இறைவனிடம்
வேண்டுங்கள் அம்மா;

உங்கள் பிரிவால் வாடும்
அன்புப் பிள்ளைகள்....

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Mar, 2021