Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி ஹெலன் ஜோசப் 2018 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சூசையப்பர் வீதி 10ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு செல்வபுரம் ஆகிய இடங்களை புலம்பெயர் வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஹெலன் ஜோசப் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
 எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ நிற்கின்றோம்!

நிலவை சூரியனை ஒளிர்கின்ற தாரகைகளை
 பார்க்கையிலே அங்கே அம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது!

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்!
 எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே... 

தகவல்: மகன் குடும்பத்தினர், பிள்ளைகள்