Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி ஹெலன் ஜோசப் 2018 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சூசையப்பர் வீதி 10ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு செல்வபுரம் ஆகிய இடங்களை புலம்பெயர் வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஹெலன் ஜோசப் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று

வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!

ஆறாண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!

கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!

ஆண்டு ஆறு சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்