Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி ஹெலன் ஜோசப் 2018 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சூசையப்பர் வீதி 10ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு செல்வபுரம் ஆகிய இடங்களை புலம்பெயர் வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஹெலன் ஜோசப் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன் என் வாழ்வினிலே

உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....

எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன் அன்பும் ஈடாகுமே அம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மகன், மருமகள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்