Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 MAY 2014
இறப்பு 22 JUL 2024
அமரர் மர்ஷிகா சுரேஸ்குமார்
வயது 10
அமரர் மர்ஷிகா சுரேஸ்குமார் 2014 - 2024 London, United Kingdom United Kingdom
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஷிகா சுரேஷ்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!

பாசம் வளர்த்த பூமகளே - உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகளே உன் உயிரை

கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!

படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை உன் வரவை எண்ணி
 ஏக்கமுடன் காத்திருக்கின்றோம்
ஒரு முறை வாராயோ?

வாழ்வு அது நிஜமில்லை உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இறப்பால்

இரண்டு ஆண்டு போனால் என்ன
பல ஜென்மம் கடந்தால் என்ன?

மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகளே!
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய்
நம் விழிகள் உறங்கிட மறுக்குதம்மா

உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Jul, 2024