Clicky

பிறப்பு 15 DEC 1935
இறப்பு 18 JUL 2019
அமரர் மார்க்கண்டு தெய்வேந்திரம்
வயது 83
அமரர் மார்க்கண்டு தெய்வேந்திரம் 1935 - 2019 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இரத்தினம் கந்தசாமி, பாரிஸ் -பிரான்ஸ் 18 JUL 2019 France

எமது உறவினரான அமரர் மார்க்கண்டு தெய்வேந்திரம் எனது அப்புவின்(அப்பப்பா) சகோதரர் மார்க்கண்டு அப்புவின் மகன். நாங்கள் இலங்கை செல்லும்போதெல்லாம் எமது சித்தப்பா தெய்வேந்திரம் அவர்களின் சங்கரத்தை இல்லத்துக்குச் சென்று திரும்புவது வழமை. இறுதியாக கடந்த 2018-ம் ஜனவரியில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோதும் அவரைச் சந்தித்து உரையாடியது ஓரளவு மனதிற்கு நிம்மதியாக உள்ளது. எமது பாரம்பரிய முறைப்படி அவரது மரணம் எனக்கு தொடக்கு. அன்னாரின் மறைவை அடுத்து அவரது பிள்ளைகள் ஓரிருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் குடும்பத்தின் சார்பில் அனுதாபத்தைத் தெரிவிப்பதை விட வேறு எம்மால் என்ன செய்ய முடியும்? உறவு முறையில் சித்தப்பாவான அமரர் தெய்வேந்திரம் அவர்களின் மறைவால் துயருறும் அவரது உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Notices

மரண அறிவித்தல் Thu, 18 Jul, 2019
நன்றி நவிலல் Fri, 16 Aug, 2019