

யாழ். வட்டுக்கோட்டை சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், துணவி சங்கரத்தையை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தெய்வேந்திரம் அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, கனகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், இரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
புஸ்பலதா(இலங்கை), விஜயேந்திரன்(ஜேர்மனி), சிறி(இலங்கை), புஸ்பசெல்வி(ஜேர்மனி), சுகந்தினி(இலங்கை), மைதிலி(கொலண்ட்), சிவானந்தன்(லண்டன்), பொன் திருமலர்(கனடா), நித்தியசக்தி(கொலண்ட்), சாமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(ஜேர்மனி), தவனேசமலர்(இலங்கை), சதானந்தன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(இலங்கை), தயாபரன்(கொலண்ட்), வாகீஸ்வரி(இலங்கை), கோணேசதாசன்(கனடா), சுரேஸ்குமார்(கொலண்ட்), சேந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீவன், சஜீதா, கஜானா, கிருத்திகா, கிருஷாந்த், மகிஷினி, நிதர்சன், தீவிகா, வினுஜா, லக்ஷிகா, ஆகாஷ், திருமகள், திஷானன், லாவண்யா, தாஜினியா, மதுரங்கன், கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் வழுக்கையாறு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது உறவினரான அமரர் மார்க்கண்டு தெய்வேந்திரம் எனது அப்புவின்(அப்பப்பா) சகோதரர் மார்க்கண்டு அப்புவின் மகன். நாங்கள் இலங்கை செல்லும்போதெல்லாம் எமது சித்தப்பா தெய்வேந்திரம் அவர்களின் சங்கரத்தை...