1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மார்க்கண்டு தையல்நாயகி
(கிளி)
வயது 88
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு தையல்நாயகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences