Clicky

பிறப்பு 24 APR 1927
இறப்பு 04 MAR 2020
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
முன்னாள் முல்லைத்தீவு அரச செயலத்தின் சிரேஸ்ட அலுவலர், இலங்கை சமாதான நீதவான்
வயது 92
அமரர் மரியநாயகம் யாக்கோப்பிள்ளை 1927 - 2020 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அமிர்தநாதர் குடும்பம் 07 MAR 2020 United Kingdom

தூரிகை ஒன்று ... .... ...... தூரிகை ஒன்று ஓய்ந்ததோ? துயரம் தாங்க முடியுதோ? தூர தேசம் தான் சென்றதோ? துரத்திப் பிடிக்கத்தான் முடியுமோ? ஓவியன் சென்று ஒழிந்தானோ? ஒழிந்தது வர்ணம் என்றானோ? ஒப்பிலா சித்திரம் தீட்டவென ஓங்கிய வான் நீலம் பெறத்தானோ? சித்திரமும் பேசுமென்று சொன்னாரோ? சொற்பதம் அதிகம் தேவையில்லையன்றோ? அற்புதமாய் பலநூறு காட்சிகள் நிற்கிறதே நினைவில் நிதந்தரமாய். சித்திரம் வரையும் கலைஞன் சத்தியமாய் இல்லாமல் போவதில்லை எண்ணங்களின் காட்சிப் படிமங்களை வண்ணமாய் பரப்புபவனே வரைஞன் இயற்கையின் அழகை, நிகழும் இயல்பான, வண்ணப் புகைப்படமாய் இதுவும் வரைந்தா எனக் கேட்க இப்படியும் வரையலாமென தீட்டியதே. காலைக் காட்சியை, மலர்களை வாழ்க்கையின் நிகழ்வை, போரை எண்ணத்தில் வந்த சமகால காட்சிகளை வண்ணத்தில் தர இன்னும் இருந்ததோ? கலையழகைக் முரட்டுத்தனமாய் நேசித்து காண்பதையேல்லாம் அழகின் வடிவமாய் ரசித்து, தான் கண்டபடியே வண்ணம் குழைத்துப் பூசி எண்ணம் நிறைந்ததெனப் பூரித்துப் போனாயோ? சூத்திரம் அறியும் பலர் இயாக்கோப்பு கோத்திரத்தில் நிறைய உளரே காத்திரமான படைப்புக்கள் தந்த தோத்திரம் செய்து வணங்க வேண்டும். பிறப்பும் இறப்பும் இயற்கை வட்டமாம் இருந்த பொழுதில் களி கூராது விட்டு கடந்த பின் கவலை மடமை! அற்புதமான கலைஞனின், வாழ்வை, படைப்புக்களை கொண்டாடுவோம். அனைத்திலும் பங்குபெறும்: அமிர்தநாதர் குடும்பம்