Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JUL 1951
இறப்பு 11 MAY 2022
அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம் (தேவகிளி)
றெஜினா Transport (M.T.R), றெஜினா Hardware, றெஜினா Building - உரிமையாளர்
வயது 70
அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம் 1951 - 2022 குடத்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

”தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்
 ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்.”
(மத் 5:8)

எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!

எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்

நீங்கள் இறைபதம் அடைந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...

அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்

உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம் 

அமரர் மரியாம்பிள்ளை தேவரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக எதிர்வரும் 11.05.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருப்பலியில் பங்கு கொண்டு ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்குமாறும் தொடர்ந்து பருத்தித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறும் மதிய உணவிலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

அப்பாவின் நினைவுகளுடன் குடும்பத்தினர்.
 பொற்பதி, குடந்தனை.

தகவல்: குடும்பத்தினர்

Photos