2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
வயது 83
Tribute
40
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை இராயப்பு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை டடா!!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் டடா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
டடா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்களின் ஆன்மா நித்திய சாந்திபெற
இறைவனை மன்றாடிப் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.