மன்னார் எமில் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
நண்பர்களாக பல்கலைக் கழகத்தில் இணைந்தோம்
பல கலைகளை ஒன்றாக கற்றோம்,
நண்பர்களாக சுற்றித்திரிந்தோம் பல்கலைகழகம் சிறியதாய் தெரிந்தது
நம் நட்புறவில்
மகிழ்ச்சியாய் நாழிகை பல கடந்தன
உன் சிரிப்பூட்டலில் மட்டுமே நண்பா,
உன் நினைவுகளை வாழ்வில் மறந்திட எம்மால் இயலாதடா நண்பா,
நினைத்து பார்த்தால் துயரம் மட்டுமே பெருமலை போல்....
இன்று நீ மட்டும் தனியாக எம்மை விட்டு போக நினைத்தது ஏனடா!
நண்பா விடை தெரியாமல் விம்மி விம்மி அழுகின்றோம் - நீயின்றி
தாங்க முடியவில்லையடா- தவிக்கிறோம்
போய்வாடா நண்பா...
எமது உயிர்த்தோழனின் பிரிவால் துயருற்று இருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். நண்பனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இப்படிக்கு அழுத விழிகளுடன் மொறட்டுவை பல்கலைக்கழக நண்பர்கள் (2002/2003 வருடம்).
My brother may pass on but his thoughts, hopes and dreams live on in Rest In Peace ANNA