5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா ராஜகோபால் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம்!
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஆண்டுகள் உருண்டோடினாலும்
உம் ஞாபகங்கள் மறக்க முடியவில்லை
உம் அன்பான பாசத்தினால்
அநேக உறவுகளை அரவணைத்தீர்
காயங்கள் மாறினாலும்
காலங்கள் சென்றாலும்
உம் உருவம் மறைந்தாலும்
உம் அன்பு எங்களை விட்டு மாறாது.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Rip