
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா ராஜகோபால் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், ராஜகோபால்(இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
முத்துக்குமார்(பிரான்ஸ்), தவஜோதி(நெதர்லாந்து), சிவரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கிறீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைதேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அம்மா, கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார், உறவினர்கள்.
Rip