4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரினா ராஜகோபால் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை எல்லாம் நிறைந்த
சீலத் திருவுருவே அன்னையே!
இப் பூவுலக வாழ்வுதனை நீத்து
ஆண்டு நான்கு கடந்ததுவோ?
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம் இனி
என நாம் மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
உங்களை இழந்த கணம் முதல்
உளம் சிதைந்து துடிக்கின்றோம்!
எங்கள் வாழ்வாதாரமே
எங்கள் அன்னையே!
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈர்ந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே!
எம் ஆரூயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Rip