

மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியான் செபஸ்ரியான் செபமாலை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் முதலெழுத்தாய் எங்களின் முகவரியாய்
முன்னின்ற நடந்த முதல்வா
இம்மண்ணில் இடர்களைந்து இன்பமாய் வாழ்ந்திட
இனியவழி தந்த தலைவா
மரியான் செபஸ்ரியான் செபமாலை தம்பதிகள்
மகனாக பிறந்த மணியே
புலவனாய் நடிகனாய் பாடக னாய்யாடி
அரங்கினை அதிர்த மலையே
குழந்தையே குழந்தையே எவர் உம்மைக் கண்டாலும்
கவலையே கலங்கியோடும்
பாட்டென்ன கதையென்ன காலங்கள் கரைவதை
எவர்வந்து தடுக்கக்கூடும்
பாட்டுக்கு பஞ்சமா பாடாத நாளுண்டா
பகலென்ன இரவென்னையா
பாடலும் போனது பஞ்சமாய் ஆனது
பாடநீ வருவாயையா
உம்குரல் கம்பீரம் உம்மனசு பால்வெள்ளை
பருகியோர் உருகி நிற்பார்
கவியென்ன சிந்தென்ன தாழிசை கொச்சகம்
மிச்சமாய் இருப்பதென்ன
எத்தனை பட்டங்கள் எத்தனை பாராட்டு
எதற்குமே மயங்காமலே
நின்று நி தானமாய் சென்று செயல் செய்திட
வழிகாட்டி நின்ற வழியே
எழிமையாய்… நாளும் இனிமையாய்.. என்றும் மகிமையாய்…
உண்மையாய்… உள்ளத்தூய்மையாய் நீதி நேர்மையாய் …
வாழ்ந்தவா வாழசெய்தவா …. மீண்டும் இங்குவா….
மீண்டுவா.. . குழந்தை யாகிவா குழந்தையே வா…
பக்தியாய் என்றும் வாழவே வழிகாட்டினீர்
செபத்திலே செபமாலையாய் தோன்றி வழிநின்றீர்
பாட்டினால் இறைவன் மகிமையை பாடி மகிந்தீரே…..
பாடவோ அங்கு ஆடவோ ஐயா போனீர்கள்….
தேடிப்போய் பாடும் கல்வெட்டே உம்மை தேடுறோம்
ஒருபாட்டு இனி கேட்குமா என்று வாடுறோம்
பாடய்யா ஒருபாட்டையா என்று ஏங்கவோ..
தூங்கையா இனி தூங்கையா போதும் தூங்கையா..
உங்கள் ஆன்மா சொர்க்கத்தில் சாந்தியடையட்டும்.