4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
(றூபி)
முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்
வயது 83

அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
1937 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
63
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீபமாய் எமை அணைத்து வாழ்ந்த நீங்கள்
அகில வாழ்வைத் துறந்து ஆண்டு நான்கு இன்று ஆனதம்மா
அன்பாய் ஆதரவாய் இன்முகத்தை காட்டி நிற்கும்
உங்கள் முகம் மறைத்து இன்று ஆண்டு நான்கு ஆனதம்மா
ஆசிரியப் பணியினிலே ஆயிரமாய் விதைகளை நீர்
ஆங்காங்கே துாவி விட்டீர் அனைத்தும் மரம் ஆனதுவே
அழகான வாழ்க்கையினை நாமமைத்து வாழ்ந்திடவே
அறிவுரைகள் தந்துநின்றீர் அவை அனைத்தும் பொக்கிசமே
ஆயிரம்தான் உறவிருந்தும் அழகான நட்பிருந்தும்
அம்மா உன் வெற்றிடத்தை அடைத்திடவே வழியுமில்லை
ஆண்டவனின் பாதத்தில் அடைக்கலமாய் சென்றுவிட்டீர் - உங்கள்
ஆன்மா இளைப்பாற ஆண்டவனை வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்நத அனுதாபங்கள். மாகிரட் ஆசிரயையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம். ... புஷ்பகாந்தன் குடும்பம்