3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
(றூபி)
முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்
வயது 83

அமரர் மாகிறேற் சூசைப்பிள்ளை
1937 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
63
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலமெல்லாம் எமை நினைத்து
கண்ணிமைபோல் காத்தவரை
காலன் கவர்ந்தெடுத்து
கடந்ததுவே மூன்றாண்டு
எம்முடனே நீரில்லை
என்றெவரும் சொன்னாலும்
எப்போதும் உம் நினைவு
எம்மனதில் நிலைத்திருக்கும்
மெழுகாய் உமை உருக்கி
வெளிச்சத்தைத் தந்தவரே
வெளிச்சத்தின் அருமையினை
வெறும் இருட்டில் உணர்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்நத அனுதாபங்கள். மாகிரட் ஆசிரயையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம். ... புஷ்பகாந்தன் குடும்பம்