

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிறப்பு: 23-08-1929 இறப்பு: 13-07-2015
ஆண்டு பத்து ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே ஐயா
ஆறுதல் எமக்கேது ஆறுதலை
தந்திடவே திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
கண்களில் நீருமில்லை காத்திருக்க
பொறுமையுமில்லை உங்கள் நினைவு
மட்டும் மாறவில்லை மாறவில்லை...
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில் உங்கள்
நினைவுகள் வந்து வந்து மீட்டிச் செல்கிறது
அன்று போல் இன்றும் எம்மோடு
இருப்பது போல் மனதை வருடி செல்கிறது
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...