யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
அப்பா நீங்கள் இறையடி எய்து
9 ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
எங்கள் விடிவெள்ளியே!
மீளவும் பெற முடியுமா நீங்கள் எம்மோடு
கூடிக்குலாவிய நாட்கள் ஒன்றென்ன
பல தசாப்தங்கள் கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா உம் நினைவுகள்
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைந்து போனதய்யா
உந்தன் அழகான புன்னகை முகத்தை
தொலைத்து விட்டு அமைதியற்று வாழ்கிறோமே
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்.
அம்மா ஒன்பது ஐந்து கரைந்ததம்மா
உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
மீண்டும் உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...