Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 AUG 1947
இறப்பு 05 SEP 2022
அமரர் மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற்
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் - வட்டகொட எஸ்டேட்
வயது 75
அமரர் மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் 1947 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!

மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 4ஆண்டுகள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றார்

இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்..!

நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!

வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,மகள், குடும்பத்தினர் சகோதரிகள் மற்றும் மைத்துனர்கள்

Photos

No Photos

Notices