

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை ஜோன்பப்ரிஸ்ற் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்த நாள் முதல்
இறுதிவரை
இணைபிரியா
வாழ்வதனை வாழ்ந்தோம்
யார் கண் பட்டதுவோ யான் அறியேன்
சிரித்துப்பேசி எனை விட்டுச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்...
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும்,
பாசத்திற்கும்,
நேசத்திலும்
எங்களை மகிழ்வித்து
எனது
அன்பிற்கினிய கணவனாக
உமது குழந்தைக்கும் ஒளிகாட்டியாக
ஒளி தந்த கலங்கரை விளக்கே
நீங்கள் அணையமாட்டீர்கள்
என்றுதான் நினைத்தோம்..!
எங்கள் இதயம் முழுவதும்
நீங்கள் தான் நிறைந்துள்ளிர்கள்
மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டன
ஆனால் உங்கள் நினைவுகள்
எம்மால்
என்றும் மறக்க முடியாது
ஆண்டவர் அடியில் ஆத்ம சாந்தியுடன்
இளைப்பாறி இருங்கள்
என்றும்
உங்களுக்காக இறைவனை வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, ஆசை மகள்.
Our Dearest Anna !!! May you enjoy the eternal happiness in the Kingdom of God ??? We miss you Anna ???