மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி துரையப்பா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடமும் நீ கருணையின் பிறப்பிடம் நீ
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஈராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எம் மனதில் அம்மா
கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன் முகம்
வந்து வந்து போகுதம்மா
ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் என்ன அம்மா
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எமக்கு கொடுப்பார் அம்மா.
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
குடும்ப உறவினர் அனைவருக்கும்,எனது குடும்ப சார்பாக ஆழ்ந்த அனுதாபம்கள்