24ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன்
(சரஸ்)
ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூடப் பொறுப்பாளர்- கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை, மானிப்பாய்(1965-1985)
இறப்பு
- 28 JUN 2000
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி நவீனச்சந்திரன் அவர்களின் 24ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் எமை சுமந்து
அரணமைத்து பாதுகாத்தாய்
அகம் நிறைந்து நாம் வாழ
மன மகிழ்ந்து பூரித்தாய்!
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
Niru (Niruban) - மகன்
- Contact Request Details