அன்பான பாசமான எங்கள் மாமி (எனது பப்பாவின் தங்கை) கனடாவில் 02.01.2022 அன்று இயற்கை எய்தினார். அவர் ஒரு சிங்கப்பெண், 52 வருடங்களாக மாமாவை (கணவர்) இழந்திருந்த எங்கள் மாமி, தன் பிள்ளைகளை வளர்த்து, இன்று அவர்கள் யேர்மனி, லண்டன், பாரீஸ், கனடா என்று நல்ல நிலமையில் இருக்கும் அவர்களிடம் அடிக்கடி போய் வந்து, பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடி, பாசமழை பொழிந்து ஒரு பூரண வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பெண்ணான எங்கள் மாமி இன்று எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்போம். அவரது இழப்பின் துயரை தாங்கமுடியாமல் தவிக்கும் அவரது பிள்ளைகள் (மச்சாள், மச்சான்) பேரப்பிள்ளைகளுடனும் அவரது அண்ணா குடும்பத்தினருடனும் இனைந்து துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!
Dear Appama, Although we never met, I had few fortunate moments as to when I’d listen to your mellow voice through the phone when speaking to your relatives. I was aware of your positive impacts on...