Clicky

மலர்வு 06 MAR 1935
உதிர்வு 02 JAN 2022
அமரர் மனோன்மணி இளையதம்பி
வயது 86
அமரர் மனோன்மணி இளையதம்பி 1935 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மனம் மறுத்தபோதும் அந்த துயரகரமான செய்தியை கேட்க நேரிட்டது. அவர் இன்று எம்மோடு இல்லை. ஆனால் அவரிடமிருந்து அரிய நல்ல பண்புகளை கற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருத்தி. தன்னைப்போல் பிறரையும் நேசிக்க, பிரதிபலனை எதிர்பார்க்காது அக்கறையுடன் அன்பு செலுத்த, அவர்களுக்கு வழிகாட்ட தெரிந்த அரிதான மனிதர்களில் நீங்களும் ஒருவர். எத்தனை சுமைகள் மனதில் இருந்தாலும் அதை தன் பலமாக்கி, ஐரோப்பாவில் உள்ள இன்றைய இளம் தலைமுறையும் கற்றுக்கொள்ளக் கூடிய தரத்தோடும் ஒரு பெரும் விருட்சத்தின் தலைவியாக முழுமைபெற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளீர்கள். அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற குறளுக்கு நீங்கள் இலக்கணம் என்றால், அது சற்றும் மிகைப்படுத்தல் அல்ல என்பதை உங்களை அறிந்தவர்கள் உடனே கூறுவர். சிறிது காலமேனும் உங்களுடன் வாழ முடிந்ததையிட்டு பெருமைப்படுகிறோம். அமைதியாக தூங்குங்கள்! நீங்கள் எங்களோடு வாழத்தொடங்கிவிட்டீர்கள்! குடும்பத்தினர் அனைவருடனும் எமது அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம். வதனி பிரான்ஸ்
Write Tribute

Tributes