Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAY 1969
இறப்பு 13 MAY 2021
அமரர் மனோகராசா அன்பரசி 1969 - 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகராசா அன்பரசி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:10/05/2024.

எங்கள் குடும்பத்தின்
 அணையாத தீபமேன
எண்ணி இருந்த எமதன்புத்
தெய்வமே ஆரூயிர் அன்னையே
எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா"
குடும்ப குல விளக்கு மறைந்து
 ஆண்டு மூன்று ஆனதே!

துணையாய் இருந்து அப்பாவுக்கும்
 எமக்கும் ஆறுதல் அளித்தீர்
கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
உடம்பில் உணர்வாய் கலந்து இருந்தீர்
கண்கள் தவிக்க நெஞ்சம் துடிக்க
மறைந்து சென்றாய் ஏனம்மா!

நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
 தினம் தினம் துதிக்கின்றோம்
காலங்கள் விடைபெறலாம்
கண் முன்னே நிழலாடும்
உங்கள் உருவம் எம் இதயத்தில்
கலந்து நிலைத்திருக்கும்
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 14 May, 2021
நன்றி நவிலல் Fri, 11 Jun, 2021