2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மஞ்சுளாதேவி குமாரலிங்கம்
1945 -
2021
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 10:06:2023
ஈராண்டு கடந்தும் ஈர விழிகளில் நீயம்மா!
எழில் மிகு எங்கள் இல்லற நந்தவனத்தின்
குல விருட்சம் நீயம்மா!.
காலப்புயல் வந்துன்னை
எடுத்துச்சென்றதேனம்மா?
அன்புடை நதியென நீயிருந்து நீராட்டிய எம்
நெஞ்செலாம் நீயின்றி காய்ந்து வறண்டு
காயங்கள் ஆனதம்மா!
உன் குலக்கொழுந்துகளின் வாழ்விங்கே
கறவைப்பசுவை இழந்த கன்றுகள் நிலை போல்
துயராகிப்போனதம்மா!
நீ இறந்தும் இறவா உயிரின் துடிப்பாய்
இன்னமும் எங்கள் இதயங்களின் துடிப்பில்
நித்தியம் வாழ்கிறாய்!
உன்னை நெஞ்சில் நினைவேந்தி
வணங்குகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
புறநானூறு 256, பாடியவர்: பெயர் தெரிந்திலது, திணை: பொதுவியல், துறை: முதுபாலை கலம் செய்கோவே! கலம் செய்கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண்பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும்...