
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மணிமேகலை பொன்னம்பலம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
4 ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும், அன்பான
வார்த்தைகளும், அரவணைப்பும்
நீங்காத நினைவுகளாக எம்
மனங்களில் நின்கின்றது அம்மா!!
அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம் அகத்தில் நின்று
ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது !
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து ஆசையாக
எமை வளர்த்து அறிவூட்டிய அன்பு அன்னையே
4 ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் என்றும் உங்கள்
பசுமையான நினைவுகள் மாறாது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Rathega and Family
Our deepest condolences to the entire family. Our prayers and thoughts are with you all. May god keep you strong through this tough time.