யாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடா Ottawa Ontario வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கவாசகர் செல்லத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை...
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
கண்ணுக்குள் உம்மை வைத்து
காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Achalingam Susilan family from UK.
Naresh deepest sympathy for lost of your father. I hope God gives strength to you and your family during this painful time.