1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மாணிக்கம் துரைசிங்கம்
ஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தார்
வயது 79
அமரர் மாணிக்கம் துரைசிங்கம்
1939 -
2019
புலோலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, நாவற்குழி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
தாங்கள் எம்முடன் இருந்த நாட்கள்
தினந்தோறும் வசந்தகாலம் தான்
ஆனால் உங்களை இழந்து தவித்தாலும்
உங்கள் நினைவில் வாழ்கின்றோம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!
கண்கள் நிறைந்த நீரோடு
கனவு சுமந்த நெஞ்சோடு
நின் வரவை எண்ணி
விழி வாசலை தேடுதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you greatly Thatha, I hope you are at peace now.