Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 JAN 1945
இறப்பு 06 DEC 2023
அமரர் மாணிக்கம் உதயகுமாரன்
ஓய்வு பெற்ற புகையிரத நிலைய ஊழியர், றோட்றி, முன்னாள் கிராம குழு தலைவர்(கொக்குவில்)
வயது 78
அமரர் மாணிக்கம் உதயகுமாரன் 1945 - 2023 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் உதயகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

தந்தையே
உதிர்ந்தது உங்கள் உயிர் மட்டுமல்ல
எங்கள் இதயங்களுமே
விடியாத நாட்களாய்
வெளிவானம்
பார்க்கிறோம்
கடிவாளம் இல்லாமல்
இன்று கதியற்று
நிற்கிறோம்
மாதம் தான் ஒன்று இன்று
வலியுடன்
கடந்ததே
நாடிநின்ற ஓர் உறவில் எங்கள் தந்தையரும் ஆனதே
விடைபெற்று நீர் சென்றீர்
இன்றும்
வினா கொண்டு நாம் இங்கே
தடையேதும் இல்லாமல்
இறைவா
மீண்டும் எம் தந்தை முகம் காண
வழியேதும் உண்டோ?
என்று ஏங்குகின்றோம்
பாவிகளாய் நாமிங்கு....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எமதுக்கு சமுக சேவையற்றிய சின்னத்தம்பி ஆணந்தாராஜா(கோண்டாடவில் தில்லையம்பதி), மார்கண்டு, குமாரசிங்கம்(கோண்டாவில் தில்லையம்பதி), குணம், ஸ்ரீ காந்தன்(உரும்பிராய் ),மேற்கு முத்துலிங்கம், சதீஷ்குமார்(முத்து பிரிண்ட்ரஸ்-சுன்னகம்), கிராம ஊடகம் கோண்டாவில் ராஜ டிவி, ஜெர்மனி எனது அருமை நண்பன் தமிழ் அருள் இணைய உரிமையாளர். அருள் பிரகாஷ் ஜேர்மனி wupprtal அண்ணா - வாழும் கலை நிறுவனத்தின் அனைத்து வாசுதேவ குடும்பத்திற்கும் மற்றும் நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் கோண்டாவில் வடக்கு, தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய மண்டபத்தில் நடைபெற வுள்ளது. அத்தருணம் தாங்களும் வருகைதந்து அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில்.  


இங்ஙனம், கெங்காதரன்(மகன்- ஜேர்மனி)
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute