
-
13 AUG 1947 - 28 JUN 2022 (74 வயது)
-
பிறந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மல்லாகம், Sri Lanka
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் நீதிமன்ற வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சண்முகநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/07/2024
ஆண்டு இரண்டு சென்றதப்பா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே!
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்
ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்கள் சொல்லை விட
எமக்கு மந்திரம் வேறு இல்லை அப்பா!
இவ்வுலகில் நாம் உதிரும்வரை எங்கள்
உள்ளத்திலே நீங்கள் குடிகொண்டு இருப்பீர்கள்
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாகும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
விண்ணுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாக என்றும்
இருப்பீர்கள் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுப்பிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
மல்லாகம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Miss you thaththa, May Your soul rest in peace