1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் சண்முகநாதன்
(உத்தரவு பெற்ற நில அளவையாளர்)
வயது 74
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 17-06-2023
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் நீதிமன்ற வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சண்முகநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Miss you thaththa, May Your soul rest in peace