யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகிழம்மா கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 28-12-2022
கண்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து
ஆண்டு ஒன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய் மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம் துறந்து
மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய்
இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது!
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது உங்கள் இனிய நினைவுகள்!!!
ஆசையுடன் நீங்கள் காட்டிய நல் வழியில்
ஆர்வத்துடன் என்றும் நாம் பயணிப்போம்!!! இது உறுதி!!!