யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரராஜா ஆறுமுகம் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே
எம்மை அழவிட்டு நீங்கள் சென்று
ஆண்டு ஏழு ஆனதுவோ!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!
அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரேமாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்
எங்கள் அன்புத் தெய்வம் அப்பாவே!
நொடிப்பொழுதில் எமை நோகவிட்டு
சென்றுவிட்டீர்கள்...
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின்
வழியில் உங்களை கண்டிட முடியாதோ...
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
We missed you uncle. RIP