திதி: 09-01-2024
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரராஜா ஆறுமுகம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனவொளிகளில் உம் முகம்
இந் நினைவொளியில் தோன்றுதே
காலங்கள் கடந்தும் - உம்
நினைவுகள் கண்ணுக்குள்ளே
ஊடுறுகிறதே
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
எமை வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
We missed you uncle. RIP