4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேந்திரராஜா ஆறுமுகம்
(நித்தியானந்தம்)
வயது 64
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரராஜா ஆறுமுகம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 21-12-2022
மாண்டார் வருவதில்லை என
காலங்காலமாய் கூறி வந்தாலும்
மீட்டும் உங்கள் நினைவுகள்
மீண்டும் வரமாட்டீர்களா
என ஏங்கித் தவிக்கும் இதயங்களின்
ஏக்கம் தீர்க்க நீங்கள் வருவீர்களா?
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உங்களை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவரே!!
நீங்கள் நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We missed you uncle. RIP