Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1936
இறப்பு 28 AUG 2018
அமரர் மகேந்திரா சிவபாக்கியம்
Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay
வயது 82
அமரர் மகேந்திரா சிவபாக்கியம் 1936 - 2018 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா சிவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?

கஷ்டங்கள் பல வந்தாலும்
கவசமாய் எங்களைக் காத்தது
உங்கள் பாசம் அம்மா......!!!...!!

எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும்
இந்த சுகம் இனிக் கிடைக்காதே..!
அம்மா நீங்கள் எங்களைப் பிரிந்தாலும்…..!
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்