யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rinteln ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாநிதி பரமேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Ernst-weltner-str. 6 31737 rinteln Germany எனும் முகவரியில் காலை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதியபோசன நிகழ்வும் நடைபெறும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.