யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rinteln ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாநிதி பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2026
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ
இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு
வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம்
நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்...