திதி:19/01/2026
யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை, கொம்மந்தறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் மகாலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நான்கு ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உங்களைப்போல் யாரும் இல்லை
அன்னையே நம் உள்ளத்தின்
உள்ளே வாழும் உன்னதமான
அன்னையே - உங்கள் உடல்
மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் உங்கள் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
செல்வ பவனம், நந்தவனம்,
மயிலியதனை, கொம்மந்தறை,
தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்.
We were saddened to hear that the beautiful person passed away. Our deepest sympathy and heartfelt condolences. Our thoughts are with you and your family. Sivasamy and Kamaladevi .