Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 APR 1939
ஆண்டவன் அடியில் 02 FEB 2022
அமரர் மகாலிங்கம் செல்லப்பாக்கியம் 1939 - 2022 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை, கொம்மந்தறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 30/01/2025

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்... 


தகவல்: கணவர் இரத்தினம் மகாலிங்கம் J P, பிள்ளைகள்- பரந்தாமன், சுபத்திரா, சுரேஸ், சுமதி, சுதாகரன் மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

Photos

Notices