கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும் பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மநாபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பத்தொன்று நாட்கள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாட்கள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
He was a beautiful soul and he will forever be missed. We will always remember the special person that he was and he will always be watching over you and the family. Although it is such a sad time,...